முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க

Preact

Preact என்பது நவீன API உடன் ரியாக்ட் செய்வதற்கு வேகமான 3kB மாற்றாகும். WebdriverIO மற்றும் அதன் browser runner பயன்படுத்தி உண்மையான பிரௌசரில் நேரடியாக Preact காம்போனென்டுகளை சோதிக்கலாம்.

செட்அப்

உங்கள் Preact திட்டத்தில் WebdriverIO ஐ அமைக்க, எங்கள் கூறு சோதனை ஆவணத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் ரன்னர் விருப்பங்களில் முன்னமைவாக preact என்பதைத் தேர்ந்தெடுக்கவும், எ.கா:

// wdio.conf.js
export const config = {
// ...
runner: ['browser', {
preset: 'preact'
}],
// ...
}
தகவல்

நீங்கள் ஏற்கனவே Vite டெவலப்மென்ட் சர்வராகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் WebdriverIO கட்டமைப்பிற்குள் vite.config.ts இல் உங்கள் கட்டமைப்பை மீண்டும் பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு, viteConfig இன் ரன்னர் விருப்பங்கள்ஐப் பார்க்கவும்.

ரியாக்ட் முன்னமைவுக்கு @preact/preset-vite ஐ நிறுவ வேண்டும். டெஸ்ட் பக்கத்தில் காம்போனென்டுகளை வழங்குவதற்கு Testing Library ஐப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கிறோம். எனவே நீங்கள் பின்வரும் கூடுதல் சார்புகளை நிறுவ வேண்டும்:

npm install --save-dev @testing-library/preact @preact/preset-vite

பின்னர் நீங்கள் டெஸ்டுகளை ரன் செய்வதன் மூலம் தொடங்கலாம்:

npx wdio run ./wdio.conf.js

டெஸ்டுகளை எழுதுதல்

உங்களிடம் பின்வரும் Preact காம்போனென்ட் உள்ளது:

./components/Component.jsx
import { h } from 'preact'
import { useState } from 'preact/hooks'

interface Props {
initialCount: number
}

export function Counter({ initialCount }: Props) {
const [count, setCount] = useState(initialCount)
const increment = () => setCount(count + 1)

return (
<div>
Current value: {count}
<button onClick={increment}>Increment</button>
</div>
)
}

உங்கள் டெஸ்டில் @testing-library/preact இலிருந்து render மெத்தடை பயன்படுத்தி டெஸ்ட் பக்கத்துடன் காம்போனென்டுகளை இணைக்கவும். காம்போனென்டுகளுடன் தொடர்பு கொள்ள WebdriverIO கட்டளைகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம், ஏனெனில் அவை உண்மையான பயனர் தொடர்புகளுக்கு மிகவும் நெருக்கமாகச் செயல்படுகின்றன, எ.கா.:

app.test.tsx
import { expect } from 'expect'
import { render, screen } from '@testing-library/preact'

import { Counter } from './components/PreactComponent.js'

describe('Preact Component Testing', () => {
it('should increment after "Increment" button is clicked', async () => {
const component = await $(render(<Counter initialCount={5} />))
await expect(component).toHaveTextContaining('Current value: 5')

const incrElem = await $(screen.getByText('Increment'))
await incrElem.click()
await expect(component).toHaveTextContaining('Current value: 6')
})
})

React க்கான WebdriverIO காம்போனென்ட் டெஸ்ட் தொகுப்பின் முழு உதாரணத்தையும் எங்களின் example repositoryஇல் காணலாம்.