v5 இல் இருந்து v6 க்கு
இந்த பயிற்சி, WebdriverIO இன் v5
பதிப்பை பயன்படுத்துபவர்களுக்கும், v6
அல்லது WebdriverIO இன் சமீபத்திய பதிப்புக்கு மாற விரும்புபவர்களுக்கும் உரியது. எங்கள் வெளியீட்டு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த பதிப்பு மேம்படுத்தலுக்கான மாற்றங்களை பின்வருமாறு சுருக்கமாக கூறலாம்:
-
சில கட்டளைகளுக்கான அளவுருக்களை நாங்கள் ஒருங்கிணைந்தோம் (எ.கா.
newWindow
,react$
,react$$
,waitUntil
,dragAndDrop
,moveTo
,waitForDisplayed
,waitForEnabled
,waitForExist
) மற்றும் அனைத் து விருப்ப அளவுருக்களையும் ஒரு ஒற்றை பொருளாக மாற்றினோம், எ.கா.// v5
browser.newWindow(
'https://webdriver.io',
'WebdriverIO window',
'width=420,height=230,resizable,scrollbars=yes,status=1'
)
// v6
browser.newWindow('https://webdriver.io', {
windowName: 'WebdriverIO window',
windowFeature: 'width=420,height=230,resizable,scrollbars=yes,status=1'
}) -
சேவைகளுக்கான கட்டமைப்புகள் சேவை பட்டியலுக்கு மாற்றப் பட்டன, எ.கா.
// v5
exports.config = {
services: ['sauce'],
sauceConnect: true,
sauceConnectOpts: { foo: 'bar' },
}
// v6
exports.config = {
services: [['sauce', {
sauceConnect: true,
sauceConnectOpts: { foo: 'bar' }
}]],
} -
சில சேவை விருப்பங்கள் எளிமைப்படுத்தும் நோக்கங்களுக்காக மறுபெயரிடப்பட்டன
-
Chrome WebDriver அமர்வுகளுக்கான
launchApp
கட்டளையைlaunchChromeApp
என மறுபெயரிட்டோம்
நீங்கள் WebdriverIO v4
அல்லது அதற்கு கீழ் பயன்படுத்துகிறீர்கள் என்றால், முதலில் v5
க்கு மேம்படுத்தவும்.
இதற்கான முழுமையான தானியங்கி செயல்முறையை நாங்கள் விரும்பினாலும், உண்மை வேறுவிதமாக உள்ளது. அனைவரும் வெவ்வேறு அமைப்பைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு படியும் படிப்படியான வழிமுறைகளைக் காட்டிலும் வழிகாட்டுதலாக கருதப்பட வேண்டும். மாற்றத்தின் போது சிக்கல்கள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.