முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க

Bamboo

WebdriverIO Bambooபோன்ற CI அமைப்புகளுக்கு இறுக்கமான ஒருங்கிணைப்பை வழங்குகிறது. JUnit அல்லது Allure ரிப்போர்டர் மூலம், உங்கள் டெஸ்டுகளை எளிதாகப் பிழைத்திருத்தம் செய்யலாம் மற்றும் உங்கள் டெஸ்ட் முடிவுகளைக் கண்காணிக்கலாம். ஒருங்கிணைப்பு மிகவும் எளிதானது.

  1. JUnit டெஸ்ட் ரிப்போர்டரை நிறுவவும்: $ npm install @wdio/junit-reporter --save-dev)
  2. பேம்பூ உங்கள் ஜூனிட் முடிவுகளைச் சேமிக்க உங்கள் கட்டமைப்பைப் புதுப்பிக்கவும், (மற்றும் junit ரிப்போர்டரை குறிப்பிடவும்):
// wdio.conf.js
module.exports = {
// ...
reporters: [
'dot',
['junit', {
outputDir: './testresults/'
}]
],
// ...
}

குறிப்பு: டெஸ்ட் முடிவுகளை ரூட் போல்டரில் இருப்பதை விடத் தனி போல்டரில் வைத்திருப்பது எப்பொழுதும் நற்பயனைத் தரும்.

// wdio.conf.js - For tests running in parallel
module.exports = {
// ...
reporters: [
'dot',
['junit', {
outputDir: './testresults/',
outputFileFormat: function (options) {
return `results-${options.cid}.xml`;
}
}]
],
// ...
}

ரிபோர்டுகள் எல்லா பிரேம்வர்கிற்கும் ஒரே மாதிரியாக இருக்கும், மேலும் நீங்கள் எவையேனும் பயன்படுத்தலாம்: மோக்கா, ஜாஸ்மின் அல்லது குகும்பர்.

இந்த நேரத்தில், நீங்கள் எழுதப்பட்ட டெஸ்டுகள் மற்றும் முடிவுகள் ./testresults/ போல்டரில் உருவாக்கப்பட்டு உங்கள் பேம்பூ இயங்கிக்கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

பேம்பூவுடன் உங்கள் டெஸ்டுகளை ஒருங்கிணைக்கவும்

  1. உங்கள் பேம்பூ ப்ரொஜெக்டைத் திறக்கவும்

    ஒரு புதிய பிளானை உருவாக்கவும், உங்கள் களஞ்சியத்தை இணைக்கவும் (அது எப்போதும் உங்கள் களஞ்சியத்தின் புதிய பதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது என்பதை உறுதிப்படுத்தவும்) மற்றும் உங்கள் ஸ்டேஜுகளை உருவாக்கவும்

    பிளான் விவரங்கள்

    நான் இயல்பு ஸ்டேஜ் மற்றும் ஜாபுடன் செல்வேன். உங்கள் விஷயத்தில், நீங்கள் உங்கள் சொந்த ஸ்டேஜுகளையும் ஜாபுகளையும் உருவாக்கலாம்

    இயல்புநிலை நிலை

  2. உங்கள் டெஸ்ட் ஜாபைத் திறந்து, பேம்பூ உங்கள் டெஸ்டுகளை இயக்கப் பணிகளை உருவாக்கவும்

** Task 1:** சோர்ஸ் கோடு செக்அவுட் ** Task 2:** உங்கள் டெஸ்டுகளை இயக்கவும் npm i && npm run test. மேலே உள்ள கட்டளைகளை இயக்க நீங்கள் Script task and Shell Interpreter பயன்படுத்தலாம் (இது டெஸ்ட் முடிவுகளை உருவாக்கி அவற்றை ./testresults/ போல்டரில் சேமிக்கும்)

டெஸ்ட் ஓட்டம்

Task: 3 உங்கள் சேமித்த டெஸ்ட் முடிவுகளை அலச, jUnit Parser பணியைச் சேர்க்கவும். டெஸ்ட் முடிவுகள் டைரக்டரியை இங்கே குறிப்பிடவும் (நீங்கள் Ant style வடிவங்களையும் பயன்படுத்தலாம்)

jUnit பார்சர்

குறிப்பு: *Make sure you are keeping the results parser task in Final பகுதி, இதனால் உங்கள் டெஸ்ட் தோல்வியடைந்தாலும் அது எப்போதும் செயல்படுத்தப்படும்

** Task: 4** (optional) உங்கள் டெஸ்ட் முடிவுகள் பழைய பைல்களுடன் குழப்பமடையவில்லை என்பதை உறுதிப்படுத்த, பேம்பூ ஒரு வெற்றிகரமான அலசலுக்குப் பிறகு ./testresults/ போல்டரை அகற்றுவதற்கான பணியை நீங்கள் உருவாக்கலாம். முடிவுகளை அகற்ற rm -f ./testresults/*.xml போன்ற ஷெல் ஸ்கிரிப்டைச் சேர்க்கலாம் அல்லது முழு போல்டரை அகற்ற rm -r testresults சேர்க்கலாம்

மேலே உள்ள rocket science முடிந்ததும், பிளானை இயக்கி அதை ரன் செய்யவும். உங்கள் இறுதி வெளியீடு இப்படி இருக்கும்:

வெற்றிகரமான டெஸ்ட்

வெற்றிகரமான டெஸ்ட்

தோல்வியடைந்த டெஸ்ட்

தோல்வியடைந்த டெஸ்ட்

தோல்வியடைந்து சரி செய்யப்பட்டது

தோல்வியடைந்து சரி செய்யப்பட்டது

Yay!! அவ்வளவுதான். பேம்பூவுடன் உங்கள் WebdriverIO டெஸ்டுகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துவிட்டீர்கள்.

Welcome! How can I help?

WebdriverIO AI Copilot